1. Home
  2. தமிழ்நாடு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு அறுவை சிகிச்சை..!

Q

நடந்து முடிந்த ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார்.
முக்கியமாக நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு முகமது ஷமி எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் ஷமிக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் வலி நிவாரண ஊசி போடப்பட்டது. ஆனால் அதற்கும் அவருடைய வலி குறையவில்லை. இதனால் ஷமிக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் சமீபத்தில் தகவல் தெரிவித்த நிலையில், ஷமிக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் கணுக்கால் காயத்திற்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துள்ளார். தற்போது மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like