நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர் முகேஷ் குமார்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி ராய்ப்பூர் நகரில் வருகின்ற ஒன்றாம் தேதி நடைபெற இருக்கிறது முதல் இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் இந்தப் போட்டியில் பங்கு பெற்றார்.
முகேஷ் குமாருக்கு திருமணம் நடக்க இருப்பதால் அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தனது திருமணம் நடக்க இருக்கும் நாட்களுக்கு மட்டும் விடுப்பு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ அவருக்கு மூன்றாவது போட்டியில் இருந்து விடுப்பு வழங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டிருந்தார்.
முகேஷ் குமாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் தீபக் சஹார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் மீதி இருக்கும் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இருப்பார் என தேர்வு குழு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான திவ்யா சிங்கை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
हल्दी की रस्म में भोजपुरी गीत पर जमकर नाचे भारतीय क्रिकेटर मुकेश कुमार और उनकी दुल्हिनियां।#MukeshKumar #Cricket pic.twitter.com/1ASjvC8dPD
— Mohd Nazim 🇮🇳 (@ImNaz33) November 28, 2023