1. Home
  2. தமிழ்நாடு

பாஜக கட்சியில் இணைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்..!

1

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், தனது கணவர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்ததை ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பாஜக உறுப்பினர் ஆகியுள்ளார். கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக உறுப்பினர் சந்தா புதுப்பிக்கப்பட்ட நிலையில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரிவாபா ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்தார். பிறகு 2022 ஆம் ஆண்டு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்தார்.

Trending News

Latest News

You May Like