1. Home
  2. தமிழ்நாடு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஐசியுவில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி..!

1

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அடுத்த போட்டியில் ரெயில்வேஸூக்கு எதிராக ஆடுவதற்காக அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறி இருக்கிறார். இந்த விமானப் பயணத்தின் போது மயங்க் அகர்வால் உடல்ரீதியாக அசௌகரியமாக உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக விமானம் கிளம்பிய இடத்துக்கே திருப்பப்பட்டு அகர்தலா வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து மயங்க் அகர்வால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "6E 5177 இண்டிகோ விமானம் அகர்தலாவிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது. மருத்துவ அவசரம் காரணமாக விமானம் அகர்தலாவுக்கே திருப்பப்பட்டு அந்தப் பயணி விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் 16:20 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டு சென்றது" எனக் கூறப்பட்டிருக்கிறது.

Trending News

Latest News

You May Like