இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒப்படைப்பு..!

40 வயதான பூர்ண குமார்ஷா, பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் பகுதியில் வேலி அருகே பணியில் இருந்தபோது தவறுதலாக சர்வதேச எல்லையைத் தாண்டியதால் ஏப்ரல் 23 அன்று பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். எல்லையருகே வேலை செய்யும் விவசாயிகளைப் பாதுகாக்கும் 'கிசான் கார்டு' பிரிவில் அவர் ஒருவராக இருந்தார்.
இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த இந்திய வீரர் பூர்ணப் குமார் ஷா இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 20 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் வாகா - அட்டாரி எல்லை வழியாக பூர்ணப் குமாரை பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது.