பீதியை கிளப்பிய இந்திய ஜோதிடர்.. மூன்றே வாரத்தில் மூன்றாம் உலகப்போர் வருதாம்..!

சமீபத்தில் இந்திய ஜோதிடர் ஒருவர் மூன்றாம் உலகப்போர் குறித்த கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அவரது இந்த கணிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானாவில் உள்ள பஞ்ச்குவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் குஷால் குமார், அவரது லிங்க்ட்இன் இடுகையில் மூன்றாம் உலகப்போர் குறித்த தனது கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து குஷால் குமார் பதிவிட்ட பதிவில், "2024 ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள ஹாட்ஸ்பாட்களில் போர் நிலைமை குறித்து மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம்.. குறிப்பாக கொரிய தீபகற்பம், சீனா-தைவான், இஸ்ரேல், பிற மத்திய கிழக்கு நாடுகள், உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம், மற்றும் நேட்டோ நாடுகளில் நிலைமை தீவிரமடையும். இதன் பின்விளைவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்..
சிலர் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம் அல்லது ராஜினாமா கூட செய்யலாம்.. அரசியல் துறையில் ஏற்ற தாழ்வுகளை நிராகரிக்க முடியாது.. சுருக்கமாக கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்து, ஒட்டுமொத்த ராணுவமும் கட்டுக்குள் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும், என குஷால் குமார் கூறினார்.
"ஜூன் 18, 2024 செவ்வாய்கிழமை ஒரு வலுவான கிரக தூண்டுதல், மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது... ஆனால் அது ஜூன் 10 அல்லது 29 அன்று கூட சாத்தியமாகும்" என்று அவர் தனது கட்டுரையில் கூறினார்.
உலக நிகழ்வுகளை கணிக்கும் ஜோதிடர் குஷால் குமார் கூறுவதால், இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.