1. Home
  2. தமிழ்நாடு

பாகிஸ்தானில் எந்த பகுதியையும் துல்லியமாக சென்று தாக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உண்டு - ராணுவ அதிகாரி..!

Q

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, அவர்களின் மதத்தை கேட்டு கொன்றது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் குறிவைத்து இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் நுாற்றுக் கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

பிறகு, இந்திய நிலைகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதனை நடுவானிலையே நமது ராணுவம் தாக்கி அழித்தது.

இதனையடுத்து இந்திய ராணுவம் அந்நாட்டின் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், நிலைகுழைந்து போன பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து, போர் நிறுத்தம் அமலானது.

இந்நிலையில், ராணுவத்தின் வான் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவன் டிகுன்ஹா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க தேவையான தளவாடங்கள் இந்தியாவிடம கைவசமாக உள்ளன. ஒட்டு மொத்த பாகிஸ்தானும், இந்தியாவின் தாக்குதல் 'ரேஞ்சில்' தான் உள்ளது. பாகிஸ்தானின் எந்த மூளையையும் தாக்க முடியும். பாகிஸ்தானின்எந்த இடத்தையும் துல்லியமாக தாக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உண்டு. ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைகத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றினாலும் ஒழிவதற்கு குழிகளை தேட வேண்டியிருக்கும்.

சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 800 முதல் ஆயிரம் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது. ஆனால், அவற்றை பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன. ஆளில்லாத விமானங்களில் வெடிமருந்துகள் இருந்தது. பொது மக்கள் மற்றும் ராணுவ முகாம்கள் மீது அவற்றிற்கு குறியாக இருந்தன. ஆனால், அவற்றால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like