ட்விட்டர் சிஇஓ-வாக இந்தியர் நியமனம்!!

ட்விட்டர் சிஇஓ-வாக இந்தியர் நியமனம்!!

ட்விட்டர் சிஇஓ-வாக இந்தியர் நியமனம்!!
X

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகியதை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக இருந்த ஆடம் மெசிஞ்சர் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து பராக் அக்ரவால் 2018ஆம் ஆண்டு மார்ச் 8இல் ட்விட்டரின் சிடிஓ பொறுப்புக்கு வந்தார்.

பராக் அக்ரவால் பாம்பே ஐஐடி, ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மைக்ரோசாஃப், யாஹூ மற்றும் AT&T Labs நிறுவனங்களில் ஆராய்ச்சி பயிற்சியாளர் ஆக இருந்துள்ளார். இந்நிலையில் ஜாக் டோர்சி விலகியதை அடுத்து பராக் அக்ரவால் ட்விட்டரின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Parag_Agrawal 1

தன்மேல் நம்பிக்கை வைத்து ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நிறுவனத்தை மென்மேலும் உயர்த்த பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்ட் அப்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த டிக் கோஸ்டோலோ தனது பதவியிலிருந்து விலகியதால் ஜாக் டோர்சி சிஇஓவானார். இருப்பினும் இரு நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்து வந்ததால் ஒற்றை இலக்குடன் பயணிக்கக் கூடிய சிஇஓவாக இருக்க வேண்டும் என ட்விட்டரின் முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வந்ததால் ஜாக் டோர்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.


இந்த நெருக்கடியில் இருந்து வந்த ஜாக் டோர்சி தனது சிஇஓ பதவியை யாரும் எதிர்பாராத வகையில் ராஜினாமா செய்துவிட்டு ட்விட்டரில் இருந்து விலகியிருக்கிறார். ஜாக் டோர்சியின் விலகலையடுத்து ட்விட்டரின் புதிய சிஇஓவாக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it