1. Home
  2. தமிழ்நாடு

இந்தியன் 3 வெளியாவதில் சிக்கல்...! பிடிவாதம் பிடிக்கும் கமல்... இதற்கு ஷங்கர் சம்மதிப்பாரா ?

1

கமலின் திரையுலக வரலாற்றில் விக்ரம் படம் மாதிரி வசூல் ஈட்டியதில்லை.  சுனாமி மாதிரி  வசூலை வாரி குவித்தது அந்தப்படம்.  அந்த படத்திற்கு அடுத்து வந்த இந்தியன் -2 படு மோசமான ரிசல்ட்டை கொடுத்திருப்பதால்  தான் அடுத்து நடிக்கும் படங்களின் மார்க்கெட் நிலையை நினைத்து கவலைப்பட ஆரம்பித்துவிட்டார் கமல்.  

இந்தியன் -2, இந்தியன் -3 இரண்டு பாகங்களும் சேர்ந்தது மாதிரியான கதையைத்தான் கமலிடம் சொல்லி இருக்கிறார் ஷங்கர்.  அதனால்தான் இந்தியன் -2ல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல்.  பல்வேறு பிரச்சனைகளால் இந்தப்படம் பல ஆண்டுகள் எடுக்கப்பட்டு வந்ததால்  அதன் கஷ்ட நஷ்டங்களை சரிசெய்வதற்காகவும்,  இஷ்டத்திற்கு எடுத்து தள்ளிவிட்டதால் அவற்றை எடிட் செய்யாமல் பார்ட் -3 கொண்டு வந்துவிட்டால் நஷ்டத்தை ஈடு செய்துவிடலாம் என்று கணக்கு போட்ட ஷங்கர், கமலிடம் சொல்ல அவரும் நல்ல யோசனை என்று தலையசைத்திருக்கிறார்.

ஆனால், டப்பிங் வேலைகளின் போது படம் ரொம்ப டல்  அடிப்பதை உணர்ந்திருக்கிறார் கமல்.  படத்தின் டெக்னீஷியன்கள் அனைவருமே இதை உணர்ந்திருக்கிறார்கள்.  ஷங்கரின் பிடிவாதத்தனம் புரிந்ததால் அவரிடம் ஒருவரும் இதைப்பற்றி பேசவே இல்லை.  படம் வெளியான பிறகு ரசிகர்கள் இதை சுட்டிக்காட்டியதால், படத்தின் ரிசல்ட்டும் படு மோசமாக இருந்ததால் வேறு வழியின்றி 12 நிமிட காட்சிகளை மட்டும் கட் செய்திருக்கிறார் ஷங்கர்.  ரசிகர்களோ, 30 நிமிட காட்சிகளுக்கு மேல் கட் செய்தால் கூட ரொம்ப டல் அடிக்கும் என்றே கருத்து தெரிவித்து  வருகின்றனர்

இந்தியன் -3 ரசிகர்களுக்கு  திருப்திதரும் என்று நம்புகிறார் கமல்.  இந்தியன் -2 தனக்கு பிடிக்கவில்லை என்பதை முன்னமே அவர் சூசகமாக, இந்தியன் -3 கதையை கேட்டுத்தான் இந்தியன் -2ல் நடிக்கவே ஒப்புக்கொண்டேன் என்று சுட்டிக்காட்டி இருந்தார்.  

இந்த நிலையில், இந்தியன் -3 படத்தை ஷங்கர் இஷ்டத்திற்கு  விட்டால் மீண்டே இதே விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும்.  தன்னுடைய மார்க்கெட்டும் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும் என்று அச்சப்படும் கமல்,  இந்தியன் -3ல் பாடல் காட்சிகள் உட்பட படத்தின் பல பகுதிகளை திரும்ப  ஷூட்டிங் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.

இந்தியன் -2 வில் ஷங்கர் சொன்னதை கேட்டிருந்தால் இந்த மோசமான ரிசல்ட்டை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்காது.  அதே தவறு இந்தியன் -3யிலும் நடக்க கூடாது.  ரீ ஷுட் செய்ய ஷங்கர் சம்மதித்தான் இந்தியன் -3 வரும். இல்லையென்றால் அப்படி ஒரு படம் இருக்கிறது என்பதையே மறந்துவிடலாம் என்கிறாராம் கமல்.

Trending News

Latest News

You May Like