1. Home
  2. தமிழ்நாடு

142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

Q

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. 357 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்தப் போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா 2வது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பிறகு, வந்த வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். கோலி 52 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய இளம் வீரர் கில் (112)சர்வதேச கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமில்லாமல், ஆமதாபாத் மைதானத்தில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என 3 வடிவ கிரிக்கெட் தொடரிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒரே மைதானத்தில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சச்சின், கோலி கூட சதம் அடித்தது இல்லை.

இதைத் தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் (78), கே.எல். ராகுல் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவி 356 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து வீரர்கள் ஓரளவுக்கு ரன்களை குவித்தாலும், யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், அந்த 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்கமாக பாண்டன், ஆட்டின்சன் தலா 38 ரன்களும், டக்கெட் 34 ரன்னும் குவித்தனர். இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

Trending News

Latest News

You May Like