கடைசி லீக் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை..!
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது. அரையிறுதிக்கு முன்னேறும் கடைசி அணி எது என்று தெரிந்துவிடும். இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி 8 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் நெதர்லாந்து அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.