1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்தியா - இலங்கை பலப்பரீட்சை..! ஆசிய கோப்பையை வெல்லபோவது யார்..?

1

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ம் தேதி தொடங்கியது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 'லீக்' முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா- தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.

இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது. தீக்சனா ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் அவருக்கு காயம் உள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இன்றுநடைபெறும் இறுதிப்போட்டியில் மகேஷ் தீக்சனா இடம் பெற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தீக்சனாவுக்கு பதிலாக சஹான் ஆராச்சிகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like