1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி..!

1

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் 3-1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் வியாழக்கிழமை (மார்ச்  7) தொடங்குகிறது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராபின்சன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 4வது டெஸ்டில் 58 ரன்கள் அடித்த ராபின்சன் ஒரு விக்கெட்டும் எடுக்காததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும்.  இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர். 

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், துருவ் ஜுரேல் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 297 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 1 புள்ளி அதிகம் பெற்று 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் 744 புள்ளிகளுடன் “கிரிக்கெட்டின் கிங்” என அழைக்கப்படும் விராட் கோலி ஒரு புள்ளி அதிகம் பெற்று 8வது இடத்திலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் 2 இரட்டை சதங்களை விளாசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 புள்ளிகள் அதிகம் பெற்று 727 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

Trending News

Latest News

You May Like