1. Home
  2. தமிழ்நாடு

தாக்குதல்களால் உருக்குலைந்துக் காணப்படும் காசாவிற்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் உதவி..!

1

இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலரும் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் உணவு மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், காசாவிற்கு 6.5 டன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் 32 டன் பேரிடர் மீட்புப் பொருட்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில், “இந்தியாவின் நிவாரணப் பொருட்கள் IAF C-17 விமானம் மூலம் எகிப்தில் உள்ள அரீஷ் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாலஸ்தீனம் மக்களுக்கு வழங்கப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like