அச்சுறுத்தும் கொரோனா.. இந்தியாவில் 7 லட்சத்தை தாண்டியது பாதிப்பு !

அச்சுறுத்தும் கொரோனா.. இந்தியாவில் 7 லட்சத்தை தாண்டியது பாதிப்பு !

அச்சுறுத்தும் கொரோனா.. இந்தியாவில் 7 லட்சத்தை தாண்டியது பாதிப்பு !
X

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,17,46,825 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,40,810 ஆக அதிகரித்துள்ளது. 

அதேநேரத்தில் கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 67,41,583 ஆக அதிகரித்து வருகிறது.  

இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,20,346 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,174 ஆக உள்ளது.


 

குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,40,150 ஆக உள்ளது. உலக அளவில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

வழக்கம்போல் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 

newstm.in 

Next Story
Share it