வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்..!
தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே, இன்று புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகலாம். அதன் தாக்கத்தால் அப்பகுதியில், வரும், 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது, 7 முதல் 11ம் தேதி வரையிலான நாட்களில், புயல் சின்னமாக வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கலாம். தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்வுக்கு, 40 சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் உள்ளன.
இதே காலகட்டத்தில், தென்மேற்கு வங்கக் கடலில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன.
இதனால், தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரள பகுதிகளில், வரும் 7 முதல் 11 வரையிலான நாட்களில், கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.