நாடே சோகம்..! ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி காலமானார்..!
டாடா நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் ரத்தன் டாடா, மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார். இருப்பினும் ரத்தன் டாடா எந்த மாதிரியான உடல்நல பிரச்சனையால் காலமானார் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தான் ரத்தன் டாடாவின் இறப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த பங்களிப்பு செய்து தொழில்துறையின் டைட்டனாக விளங்கிய அவர் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுவார். ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைட்டும்'' என கூறியுள்ளார்.