1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம்! அதிசயிக்கும் பிற நாடுகள்!



உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54லட்சம் பேர்.

ஆரம்ப நிலையிலேயே நோய்த்தொற்றை கண்டறியும் வகையில் அதிக அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 10 லட்சம் என்ற அளவில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நொய்த்தொற்று எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மொத்த பாதிப்பு 54லட்சத்தில் சுமார் 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 70 லட்சம் பேர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 42.5 லட்சம் பேர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
newstm.in

Trending News

Latest News

You May Like