1. Home
  2. தமிழ்நாடு

சாதனை படைத்த இந்தியா..! கடந்த 10 ஆண்டுகளில் 31000 கி.மீ. துாரத்துக்கு புதிய ரயில் பாதை..!

1

மும்பையில் நடைபெற்ற விக்ஷித் பாரத் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மோடி அரசில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் ஏற்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்தும் தரவுகளை வெளியிட்டார்.

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில், ரயில்வே எவ்வாறு ஒரு பெரிய அளவிலான நெட்வொர்க்குகளைச் சேர்த்தது மற்றும் பரந்த அளவிலான மின்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு உட்பட்டது என்பதை அமைச்சர் தெரிவித்தார்.

"இன்று, நாட்டில் நாள் ஒன்றுக்கு 4 கி.மீ., ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 5,300 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.இது, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள மொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும்.கடந்த, 10 ஆண்டு களில், 31,000 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இது, மிகப்பெரிய ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும்.
கடந்த, 10 ஆண்டுகளில், 44,000 கி.மீ., துார ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டது.அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான 60 ஆண்டு கால ஆட்சியில், 20,000 கி.மீ., துாரத்துக்கே மின்மயமாக்கப்பட்டது. விரைவில் மின்மயமாக்குவதில், 100 சதவீதத்தை எட்ட உள்ளோம்.நாடு முழுவதும் 300 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் 120 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. 

மீட்டர் கேஜ் பாதைகளை, அகலப் பாதையாக்கும் பணிகளை, 1950 - 1960களிலேயே துவங்கியிருக்க வேண்டும். ஆனால் ரயில்வேயை தொடர்ந்து புறக்கணித்து வந்து உள்ளனர்.

இந்த திட்டங்களுடன், ரயில் நிலையங்களை புதுப்பிப்பது, உள்நாட்டிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்பது ஆகியவற்றுக்கு மோடி அரசு முக்கியத்துவம் தருகிறது.

தற்போது, 300 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 'வந்தே பாரத், புல்லட் ரயில்' என, அதிகவேக ரயில் சேவைகள் சாத்தியமாகியுள்ளன. மஹாராஷ்டிரா - குஜராத் இடையேயான புல்லட் ரயில் சேவையைப் போல, எட்டு நகரங்களுக்கு இடையேயான சேவையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைத் தொடர்ந்து, இரு நகரங்களை இணைக்கும் 'வந்தே மெட்ரோ' சேவை, புதிய ஆட்சியின், முதல் 100 நாட்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம், இதைத் தவிர, 500 கி.மீ., துாரத்துக்கு உள்ள நகரங்களை இணைக்கும் 'வந்தே சேர் கார்', அதற்கு மேற்பட்ட தொலைவுள்ள நகரங்கள் இடையே, 'வந்தே ஸ்லீப்பர்' சேவை துவக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Trending News

Latest News

You May Like