இந்தியா 263 ரன்களுக்கு ஆல் அவுட்..!
மும்பையில் வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இறுதி டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. மிக விரைவாகவே விக்கெட்கள் விழ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அனி வீரர், டேரில் மிட்சல் 82 ரன்கள் விளாசினார். இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 19 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 86 ரன்கள் சோ்த்தது. டாப் ஆா்டா் பேட்டா்களில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ரோஹித் சா்மா 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தொடர்ந்து, இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை நியூசி. பந்துவீச்சை திணறடித்தனர். 5-வது விக்கெட்டாக 60 ரன்களில் ரிஷப் பந்த் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால், இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. மேலும், நியூசி. அணியைவிட 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.