1. Home
  2. தமிழ்நாடு

ஆசிய விளையாட்டு போட்டி: 16 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா..!

1

நேற்று நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடரில் ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும் இந்திய அணியும் மோதின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 16-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

மொத்தம் ஒன்பது வீரர்கள் கோல் அடித்து தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நான்கு கோல்களை அடித்து அசத்தினார், அதே சமயம் மந்தீப் சிங் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

மகளிர் படகு போட்டி:

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற படகு போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது. தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்க பதக்கமும், சிங்கப்பூர் வெண்கல பதக்கமும் வென்றது. ஆசிய விளையாட்டு தொடரில் இன்று இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

குதிரையேற்ற போட்டி:

 1982ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது. இந்தியா முதல் முறையாக பங்கேற்றபோதும், சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ரகுபீர் சிங், குலாம் முகமது கான், பிரஹலாத் சிங் போன்ற வீரர்கள் தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். அணிக்கான போட்டியில் ரகுபீர் மற்றும் முகமது ஆகியோர் தங்கம் வென்றனர்.

இந்த போட்டிக்கு பிறகு குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கம் வென்றதில்லை. அந்த கனவு 41 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிறைவேறியிருக்கிறது. ஆம், சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் கொண்ட இந்திய அணி தங்கம் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெருமைக்குரிய வீரர், வீராங்கனைகள் குறித்து பார்ப்போம்.

துப்பாக்கி சுடுதல் போட்டி:

இன்று நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவைச் சேர்ந்த சிஃப்ட் சாம்ரா கவுர் தங்கம் வென்றுள்ளார்.

25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த மனு பார்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வான் ஆகியோர் அடங்கிய துப்பாக்கி சுடுதல் அணி 1759 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுளள்து. அதில்,  மனு பார்கர், ஈஷா சிங் ஆகியோர் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

அதேபோல முன்னதாக 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த ஷிப்ட் சாம்ரா, ஆஷி சௌக்சே,  மன்னி கௌசிக் ஆகியோர் அடங்கிய அணி 1764 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.  இதன் மூலம் 4 தங்கம் , 5 வெள்ளி,  7 வெண்கல பதக்கம் என மொத்தமாக 16 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

 

Trending News

Latest News

You May Like