1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா அரை இறுதிக்கு முன்னேற்றம்..!

1

துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் அந்த அணி 49.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 46 மற்றும் குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2, அக்சர், ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோஹித் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த விராட் கோலி, கில் உடன் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கில், 46 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ், கோலி உடன் சேர்ந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 56 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். ஹர்திக், 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதிவரை களத்தில் இருந்த கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மட்டுமே ஸ்கோர் செய்திருந்தார். இரண்டு கவர் டிரைவ்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Trending News

Latest News

You May Like