தமிழகத்தில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் !! முன்னணி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் !! முன்னணி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் !! முன்னணி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்
X

கொரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் தமிழகத்தின் பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்காக, முதலீடு செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துதல், வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் சந்திப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு உலகளவில் முன்னணியில் இருக்கும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் என பல்வேறு துறை நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், உலகளவில் நுகர்வோர் பொருள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மேட்டல் இங்க் நிறுவன தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான உகந்த சூழல்களை பட்டியலிட்டு உள்ளார்.

Newstm.in

Next Story
Share it