1. Home
  2. தமிழ்நாடு

டிஎன்பிஎஃப்சி தலைமை அலுவலகத்தில் வருமான வரி துறையினர் ரெய்டு..!

1

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் (டிஎன்பிஎஃப்சி) தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான டிஎன்பிஎஃப்சி மூலம் மின்சாரத்துறை உள்கட்டமைப்பை நிர்வகிப்பது, போதிய நிதியை துறை சார்ந்த பணிகளுக்கு அளிப்பது உள்ளிட்ட முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று டிஎன்பிஎஃப்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான வரி செலுத்திய புகாரில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.நேற்று முதல் இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் வரி சரிபார்ப்பு பணிகளை செய்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் வரி சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பொதுத்துறை நிறுவனத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like