அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி, ரகளை.. வீடியோ வெளியாகி பரபரப்பு !
அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி, ரகளை.. வீடியோ வெளியாகி பரபரப்பு !

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மத மற்றும் எம்எல்ஏ பரமசிவம், உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது மண்டபத்திற்குள் மஞ்சள் நிறக்கொடியுடன் புகுந்த 30 பேர் திடீரென மேடையை நோக்கி விரைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். அவர்கள் எதிர்தரப்பினர் சமாதானம் செய்தப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்த சேர்களை எடுத்து அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் அமைச்சர் வளர்மதி, மா.செ உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேறி சென்றுவிட்டனர். பின்னர் ஒருவழியாக அமைதி ஏற்பட்டது. அப்போது தகராறு செய்தவர்கள் வெளியேற்றப்பட்டன.
அதிமுகவில் பதவி வழங்குவது தொடர்பாக இருதரப்புக்கு இடையே போட்டி உள்ளதாகவும் இதனால் ஒரு தரப்பு மஞ்சல் நிற கொடியுடன் புகுந்து அட்டகாசம் செய்ததாகவும் நிர்வாகிகள் தகவல் கூறுகின்றனர்.
இதனிடையே தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#admk_golden_moments
— Uma PanneerSelvam (U.P.S) (@LumosMaxima1510) September 13, 2020
OPS and EPS supporters clash with each other in Trichy . pic.twitter.com/9Pj46DYSC9
newstm.in