1. Home
  2. தமிழ்நாடு

எந்த கட்சியுடன் பாமக கூட்டணி வைக்கும் என்பது இன்னும் 3 மாதங்களில் தெரிய வரும் - ராமதாஸ்..!

1

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் அன்புமணி மீது பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தார். இந்த நிலையில் தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் அபிராமபுரம் இல்லத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியே உதாரணமாக திகழ்கிறார். அவர் வயது முதுமை அடைந்த போதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி முதலமைச்சராக இருந்தார். அவர் 94 வயது வரை தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

பாமகவைப் பொறுத்தவரை அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் விரைவில் வரும். அது சென்னையில் இருந்து வருமா?, தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வருமா? என்று கூற முடியாது. நான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேசிக்கின்றேன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இதுவரை நான் சந்தித்தது இல்லை.

கூட்டணி குறித்து இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தெரிந்து விடும். யாருடன் கூட்டணி? எப்போது? ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் அப்போது விடை இடைக்கும். இந்த விஷயத்தில் இப்போது ஏதும் சொல்ல முடியாது,"கூறினார்.

தொடர்ந்து மாலையில் சென்னை அபிராமபுரம் இல்லத்தில் இருந்து தைலாபுரம் புற்றப்படும் முன்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய ராமதாஸ், "ஊடகத்தினர் எதிர்பார்க்கும் செய்தியை இப்போது என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிக்கும் தீர்வு ஏற்படும். அந்த தீர்வானது நிச்சயமாக பாமகவுக்கும், நாட்டுக்கும் சரியானதாக இருக்கும்.

தேர்தல் கூட்டணி குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. பாமக இடதுசாரி சிந்தனையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இப்போது வலதுசாரி சிந்தனை மேலோங்கி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு நிலை இருக்கிறதா? என்று பார்க்க என்னிடம் பூதக்கண்ணாடி இல்லை. பாமக தொண்டர்கள் எப்போதும் எந்த நாளும் என் பக்கம் தான் உள்ளனர். என்னை குலத்தெய்வமாகவும், கடவுளாகவும் நினைக்கக் கூடிய பல்லாயிரக்கான தொண்டர்களை, சொந்தங்களை, எனது வழிகாட்டிகளின் நலத்திற்காகவும், முன்னேற்றத்திற்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றேன்" என்றார்.

Trending News

Latest News

You May Like