தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை வெளுக்க போகுது.. எந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதன்கிழமை நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.