1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் : அதிரவைக்கும் தகவல்

தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் : அதிரவைக்கும் தகவல்


தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவருடன் தொடர்பிலிருந்த ஈரோட்டைச் சேர்ந்த 696 பேர் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முழுவதுமாக கொரோனா சிகிச்சைக்காக மையமாக மாறியிருப்பதாகக் கூறினார். கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினருடன் சேர்த்து இது வரை 15 பேர் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் 169 வீடுகளைச் சேர்ந்த 694 நபர்கள் தனிமைப்படுத்தி வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


மேலும் அவர்களுக்கு கைகளில் முத்திரை வைக்க இருப்பதாகவும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் உடனடியாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் அது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like