1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்..!

1

தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் துணை முதலமைச்சர்கள் உள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார், மேகாலயா, ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.

இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலங்களுக்கான துணை முதலமைச்சர் பதவி என்பது பொதுவான ஒன்றாகவே உள்ளது. நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் துணை முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமாகிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயர்ப் பலகை மாற்றம் செய்ய்யப்பட்டுள்ளது 


 

Trending News

Latest News

You May Like