#JUST IN : தமிழக பெண் அரசியல் தலைவர் காலமானார்..!
திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், 31-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ். சுஜாதா(54) மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2022-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக்க வேண்டும் என ஸ்டாலினை நேரடியாக சந்தித்து ப.சிதம்பரம்., வலியுறுத்தும் அளவுக்கு திருச்சி முகமாக இருந்தவர்.
அந்த அளவுக்கு திருச்சி அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்த சுஜாதா இன்று மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக, விசிக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த கையோடு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரது இறுதிச் சடங்கு நாளை காலை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெற இருக்கின்றது.