1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

1

தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார், யார்? என்பது பற்றிய தொகுதிக்கு சிலர் அடங்கிய உத்

இதனைத்தொடர்ந்து கட்சியின் அகில இந்திய அலுவலகத்தில் நேற்று மாலை, மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு பற்றிய பரிசீலனை மீண்டும் நடைபெற்றது.தமிழ்நாடு மட்டுமின்றி வேறு பல மாநிலங்களுக்கும் பரிசீலனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என பொறுப்பாளர் அஜோய்குமார் கூறினார்.

இந்நிலையில், ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் மட்டும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாக்கூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில் விஷ்ணுபிரசாத் மற்றறும் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிட உள்ளனர். சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணகிரி தொகுதிக்கு கோபிநாத், விருதுநகர் தொகுதிக்கு மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி , மயிலாடுதுறை - இன்னும் அறிவுப்பு வரவில்லை

Q

Trending News

Latest News

You May Like