1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இலங்கை செல்ல சாந்தனுக்கு ஒன்றிய அரசு அனுமதி..!

1

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கை தமிழரான சாந்தனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் 2022-ம் ஆண்டு உச்சநீதிம்ன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் இலங்கை தமிழர் என்பதால் சாந்தன், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

 இந்நிலையில், ராஜிவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் இலங்கை நாட்டுக்கு திரும்ப ஒன்றிய அரசு நேற்று (பிப். 22) அனுமதி வழங்கியது. ஒன்றிய அரசின் அனுமதி அளித்த உத்தரவு நகல், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (பிப். 23) அனுப்பப்பட்டுள்ளது. இதனால், வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை சாந்தன் இலங்கை புறப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன், திங்கள் அல்லது செவ்வாய்கிழமை இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது 

Trending News

Latest News

You May Like