#JUST IN : அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி..!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, கூடுதலாக உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் நாசர், அரசு கொறடாவாக உள்ள திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., கோவி செழியன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (செப். 29) நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.