1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சசிகாந்த் செந்தில் எம்.பி..!

Q

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவகக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

உண்ணாவிரதத்தின்போதுபோது சசிகாந்த் செந்திலுக்கு கடந்த 30ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், 4 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போரட்டத்தை செந்தில் சசிகாந்த் நேற்று முடித்துக்கொண்டார். காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை தொடர்ந்து நேற்று இரவு உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மருத்துவமனைக்கு சென்று பழச்சாறு கொடுத்து நிலையில் அதை ஏற்றுக்கொண்ட செந்தில் சசிகாந்த் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

Trending News

Latest News

You May Like