1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை..!

Q

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியை நாளை நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த தவெக நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்துகொள்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வடமாநிலங்களில் பாஜக அடுத்தடுத்து வெற்றிபெற, வலிமையாக இருக்க முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று.. பூத் கமிட்டி. அதோடு வாக்காளர் லிஸ்டில் ஒரு பக்கத்தில் 10 வாக்குகள் இருக்கிறது என்றால் அதில் 6க்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் பிளான். பாஜகவின் இந்த வியூகம் அங்கே தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்து உள்ளது.

இதைத்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் திட்டமாக வழங்கி உள்ளாராம். ஆனால் வாக்காளர் லிஸ்ட் அடிப்படையில் இல்லாமல் வீட்டில் 3 வாக்குகள் இருந்தால் அதில் குறைந்தது 1 வாக்கை பெற வேண்டும். அப்பா - அம்மா - மகன் இருந்தால்.. மகன் வாக்கை பெற வேண்டும் என்று.. அதாவது இளைஞர்கள் வாக்கை பிடிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு ஆலோசனை வழங்கி உள்ளாராம்.

இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (பிப்ரவரி 26) நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் இன்று (பிப்ரவரி 25) சென்னை வந்தடைந்தார். 

பிரசாந்த் கிஷோர், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வாக்காளர்களை எப்படி சந்திக்க வேண்டும், எதை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிகிறது.

Trending News

Latest News

You May Like