#JUST IN : உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்..!
12 ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாகக் காரணங்களுக்காக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக உயர் கல்வித்துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக இருந்தவர்.
அதேபோல தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யப்பிரத சாஹூ, விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மின்வாரியத் துறை செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.