#JUST IN : சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு..!
7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வருகிறது.
இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் 10,000 வாக்குகள் முன்னிலை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் வினோஜ் பி.செல்வம் 8,381 வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் பாஜகவை விட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக வெறும் 27 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டின் சிதம்பரம் தொகுதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் முதல் சுற்று எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜகவின் கார்த்திகேயனும் தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறார்.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி சார்பில் ஐயூஎம்எல் கட்சியின் நவாஸ்கனி, அதிமுக சார்பில் ஜெயப்பெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரபிரபா ஜெயபால் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் நவாஸ்கனி முன்னிலையில் உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 1,642 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளார்.