#JUST IN : மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்..!

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில், திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர். சிவலிங்கம், திமுக கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், கமல்ஹாசன் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்களான தனபால், இன்பதுரை ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.