1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்..!

1

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த சூழலில், அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணு, சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவொற்றியூர் காவல்நிலையத்தில் மேலும் ஒருவழக்குப் பதிவு செய்யப்பட்டது. சரவணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில்,  மகா விஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ள போலீசார்

Trending News

Latest News

You May Like