#JUST IN : ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!

ஜேஇஇ மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (பிப்.11) வெளியிட்டது. 2025ம் ஆண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வில் மொத்தம் 14 பேர் 100 சதவிகிதம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 13 பேர் மாணவர்களும், 1 மாணவியும் அடங்கும். 44 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் பெற்றுள்ளனர். ஜேஇஇ முதன்மை 2025 அமர்வு 1 தேர்வை, 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.