#JUST IN : கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி..!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கடலூர் நாடாளுமன்ற தொகுதி.
திட்டக்குடி, விருதாச்சலம், நெய்வேலி, கடலூர், பண்ரூட்டி, குறிச்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் கடலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும், திராவிட கட்சிகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.
2024 மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், எம்.கே.விஷ்ணுபிரசாத், அதிமுக கூட்டணியில், தேமுதிக சார்பில் சிவக்கொழுந்து, பாமக சார்பில் தங்கர் பச்சான், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிவாசகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில், கடலூர் தொகுதியில், 72.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1,76,625 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேமுதிகவின் சிவக்கொழுந்து இரண்டாம் இடம்.