1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி..!

1

கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறி விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் விஜயதாரணி ராஜினாமா செய்தார். பாஜகவில் இணைந்த அவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மக்களவைத் தேர்தலுடன் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் விளவங்கோட்டில் மீண்டும் விஜயதாரணி களமிறங்குவார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அந்த வாய்ப்பையும் பாஜக விஜயதாரணிக்கு வழங்காமல் வி.எஸ்.நந்தினிக்கு வழங்கியது.

திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே விளவங்கோடு தொகுதி தரப்பட தாரகை கத்பர்ட் அங்கு போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராணி களம் காண்கிறார்.

இந்நிலையில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்கிறது. 

Trending News

Latest News

You May Like