#JUST IN : இலங்கை அதிபரானார் அநுரா குமார திசாநாயக்க..!
இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில், 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர்தான் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர்.
சனிக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாசவுக்கும், அநுராவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி காணப்பட்டது. இருப்பினும், 50 சதவீத வாக்குகளை யாரும் பெற முடியவில்லை. முதலில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர 42 சதவீத வாக்குகளை யும், சஜித் பிரேமதாசா 32 சதவீத வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய அதிபர் ரணில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரத்தவறியதால் முதல் சுற்றிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார.
முதல் கட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறாத காரணத்தால், 2-வது விருப்ப வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 2 மற்றும் 3-வது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் அநுர முதலிடத்தில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக மார்க்சிஸ்ட் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று பதவியேற்க உள்ளார்.
இலங்கையின் 9ஆவது அதிபராக இன்று பதவியேற்றார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இவர், கல்லூரி நாள்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார்.