1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் , கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவிகிதம் எவ்வளவு தெரியுமா ? விளக்கம் அளித்த ஆணையர்

சென்னையில் , கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவிகிதம் எவ்வளவு தெரியுமா ? விளக்கம் அளித்த ஆணையர்


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ; சென்னையில் ஐந்தரை லட்சம் ஆர்.டி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினசரி 15,000 பரிசோதனைகள் மேற்கொள்ள முயற்சிக்கிறோம்.

குறைந்தது 12,000க்கும் குறைவாக பரிசோதனைகள் செல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். இந்திய அளவிலேயே அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளும் முதல் பெருநகரம் சென்னை. சுமார் 5 லட்சம் பேர் இ- பாஸ்க்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவற்றில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஷாப்பிங் செய்தால் 10 நாட்களுக்கு தேவையானவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி வெளியில் செல்வதை தவிருங்கள்.

60-70% வணிக இடங்களில் கை கழுவும் வசதிகள் செய்யப்பட்டுவிட்டன. சென்னையில் 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 15% இறப்புகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து முடித்தவுடன் முடிவுகளுக்காக காத்திராமல் உடனடியாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்கிறோம் என தெரிவித்தார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like