திருப்பூரில் கூகுளை நம்பி சென்ற கார் ஓட்டுநர் முட்டு சந்தில் நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது..!
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி சாலையில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் சென்றவர்கள், கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்று கொண்டிருந்தனர். சூசையாபுரம் கிழக்கு பகுதி வழியாக அய்யப்பன் கோவில் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் புகுந்தனர். ஆனால் அந்த சாலையில் கார்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது அவர்களுக்கு தெரியவில்லை..
இதற்கும் எதிர்திசையில் காரில் வந்தவர்கள் முகப்பு விளக்கை அணைத்து எச்சரித்து வழியில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரையும் கவனிக்காமல் சாலையில் கூகுள் மேம்பை பார்த்தபடி கடந்து சென்றுள்ளனர். இறுதியாக சாலையின் நடுவே தடுப்பு இருந்ததை கண்டுள்ளனர். காரை அங்கு திருப்ப முடியாமல் அவதிப்பட்ட அவர்கள், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கியே காரை இயக்கியுள்ளனர். அதன்பின்னர் மாற்றுப்பாதையில் சென்றனர். கூகுளை நம்பி சென்ற கார் ஓட்டுநர் முட்டு சந்தில் நின்ற சம்பவம் திருப்பூரில் பேசுபொருளாகி உள்ளது.