1. Home
  2. தமிழ்நாடு

முடியவே முடியாது - இதையெல்லாம் பாடத்தில் வைக்க முடியாது! – என்.சி.இ.ஆர்.டி விளக்கம்..!

Q

12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் பாபா் மசூதி என்பதற்கு பதிலாக ‘மூன்று வடிவ அமைப்பு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ராமா் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தி குறித்த தகவல்கள் நான்கு பக்கங்களிலிருந்து இரண்டு பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்ததோடு, பாடத்திட்டங்கள் காவிமயமாக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
என்.சி.இ.ஆா்.டி. பாடத்திட்டங்கள் காவிமயமாக மாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அதன் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி மறுத்துள்ளார்.
இது தொர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்தப் பேட்டியில்:
ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதை குறை கூறுவது நியாயமற்றது. பள்ளிகளில் வன்முறை தொடா்பான தகவல்களை நாம் கற்பித்தால் அது மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். அவர்கள் வன்முறையைப் பின்பற்றும் குடிமகன்களாக அல்லது வன்முறையால் பாதிக்கப்படுபவர்களாக மாற வழிவகுக்கும். இதுதான் கல்வி கற்பிப்பதன் நோக்கமா?
மாணவர்களை நோ்மறையான குடிமகன்களாக உருவாக்குவதே எங்களின் நோக்கம். ராமா் கோயில், பாபா் மசூதி என எந்தத் தரப்புக்கு சாதகமான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தாலும் அதுதொடா்பான தகவல்களை புத்தகங்களில் சேர்க்கவில்லை என்றால் மற்றவா்களுக்கு என்ன பிரச்னை? புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தில் புதிய தகவல்களை நாங்கள் சேர்த்துள்ளோம்.” என்றார்

Trending News

Latest News

You May Like