1. Home
  2. தமிழ்நாடு

வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்!

Q

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- எங்கெங்கு காணினும் சக்தியடா ” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தொட்டதெற்கெல்லாம் அவரைக் குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில் “எங்கெங்கு காணினும் இந்தி” -யடாஎன்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
நாடு முழுவதும் இந்தி மாதம் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்தக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று மாலை நடைபெறும் என்றும், அதில் தமிழக ஆளுநர் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல” என்றார்.

Trending News

Latest News

You May Like