1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு..!

1

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.ரேஷன் கடைகளில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வர இயலாத காரணத்தால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு கடிதம் (Authorization letter) வழங்கப்பட்டவர்கள் நேரில் வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என இருந்து வந்தது.

ஆனால் தற்போது கை ரேகை பதிவு மற்றும் கருவிழி ரேகை பதிவு உள்ள நிலையில், ரேஷன் அட்டையில் பெயர் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டவராயினும் நேரில் வந்தே பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில்  இதுகுறித்து உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

80 வயதிற்கு மேற் பட்ட முதியவர்களை நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது.

இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் எனவும் உணவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத நிலையில் உள்ளவர்கள் அவர்கள் தொகுதியில் உள்ள உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பதுகாப்பு துறை மண்டல  அலுவலகத்தில் (AC /TSO) அங்கீகார படிவம் (Authorization form) பெற்று அதனை அவரவர்  பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தந்து பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நபரின் மூலம் பெறலாம் என தெரிவிக்கின்றனர். இந்த அங்கீகார படிவம் அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

80 வயதுக்கு மேல் உள்ள நபர்களின் குடும்பத்தினர் யார் வேண்டுமானாலும் வந்து ரேஷன் கடையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தான் திடீரென ஒரு வதந்தி செய்தி பரவியதால் உணவுத்துறை இந்த விளக்கத்தையும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்து உள்ளது 

Trending News

Latest News

You May Like