1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

1

திருப்பதி செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்கள் பலரும் தங்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்து திருமலை வனப்பகுதி துணை கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில். திருப்பதி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் என்பது வனவிலங்குகள் இனப்பெருக்க காலம் ஆகும். இதனால் மலைப்பாதைகளில் காட்டு எருமை உள்ளிட்ட வனவிலங்கள் சுற்றித்திரியும் என்பதால் வாகன ஓட்டிகள் மீது வனவிலங்குகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருமலை மலைப்பாதையில் வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை இரு சக்கர வாகனங்கள் இரவு நேரங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

அதன்படி வருகிற செப்டம்பர் 30ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like