1. Home
  2. தமிழ்நாடு

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இன்று முதல் புதிய விதிமுறை அமல்..!

1

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டு விதிமுறைகள்:

எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ கார்டு, சில கிரெடிட் கார்டுகளுக்கு அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ஜூலை 1, 2024 முதல் ரிவார்டு புள்ளிகள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது மின்சார கட்டணம், கேஸ் பில் போன்ற அரசு தொடர்பான பேமெண்ட்களுக்கு இனி ரிவார்ட் பாயின்ட்ஸ் இல்லை.

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு

ஐசிஐசிஐ வங்கி, ஜூலை 1, 2024 முதல் பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் அனைத்து கார்டுகளுக்கும், (எமரால்ட் பிரைவேட் மெட்டல் கிரெடிட் கார்டு தவிர) கார்டு ரீப்லேஸ்மென்ட் கட்டணம் ரூ.100 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட உள்ளது.

சிட்டி வங்கி கிரெடிட் கார்டுகள் - ஆக்சிஸ் வங்கி:

சிட்டி வங்கி கிரெடிட் கார்டு வர்த்தகத்தை ஆக்சிஸ் வங்கி கைப்பற்றியதைத் தொடர்ந்து. இது ஜூலை 15, 2024க்குள் சிட்டி பேங்க் கணக்குகளை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றும் பணிகள் நிறைவடைவது விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் புதிய ஆக்சிஸ் வங்கி கார்டுகளை (ஆண்டின் இறுதிக்குள்) பெறும் வரை சிட்டி பிராண்டட் கார்டுகள் தொடர்ந்து இயங்கும் என அறிவித்துள்ளது. சிட்டி வங்கி டூ ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றுவது வரையில் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் சேகரித்த புள்ளிகள் காலாவதியாகாது. ஆனால், இடம்பெயர்வுக்குப் பிறகு பெறப்பட்ட புள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும் என அறிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக 29-08-2024 அன்று பெறப்பட்ட புள்ளிகள் 29-08-2027 அன்று காலாவதியாகும் என தெரிவித்துள்ளது.

HDFC வங்கி கிரெடிட் கார்டுகள்

HDFC வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி CRED, Paytm, Cheq, MobiKwik மற்றும் Freecharge போன்ற தளங்கள் மூலம் செய்யப்படும் வாடகை பேமெண்ட்களுக்கு புதிதாக கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு 1% கட்டணம் விதிக்கப்படும். இது ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

Trending News

Latest News

You May Like